Powered By Blogger

6.11.11

How a teacher shouldn’t be?


Neither lenient nor strict!
Invisibles between extremes are always not easy to identify!
Need not be a friend, but don’t get into the ‘unwanted list’!
Questions can be asked but answers ‘should not’ be expected!
In fact every single creature in this World is busy.
So, correcting the test papers in class will only add flames to fire!
There is something more always.
Don’t make us, ‘syllabus-maniac’!
World is vast with more eminent personalities.
People who share all good things without beating their own drums
Always deserve admiration.
Veracity can be tested.
But ‘assignments’ are not the parameters to estimate life’s important factors!
Test papers and numerical figures can’t decide everything!
Life is to move on…
‘Studying’ is done! Rest is not with us!

அன்பு


"விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டேன்" என்று கூறினாயே ?
என்று,எதையோ இழந்ததைப் போல தாயிடம் கேட்டது,
உண்மையான அன்பென்றால் என்ன என்பதை
இன்றும்கூட உணராத பதினெட்டு வயதான குழந்தை ! 

தாயின் கண்டிப்பு


ஒவ்வொரு முறை நீ என்னை உன் சந்தேக வட்டத்தினுள் கொண்டுவரும்போதும் தெரிகிறது,
உன் வாழ்ககையில் நீ எதையோ தவறாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்று!

வெறுப்பு


உன்னை வெறுக்க எவ்வளவோ முயற்சித்தேன்.
இறுதியில் வெறுக்கவும் செய்தேன்,
உன்னையல்ல ! உன்னை வெறுக்க வேண்டும் என்ற என் முயற்சியை !

தாயிடம் சேய்.


என் இன்ப துன்பங்களையெல்லாம் உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்,
கேட்பதற்கு யாரும் இல்லை என்பதற்காக அல்ல!
உன்னால் தான் நான் இவ்வுலகிற்கு அறிமுகமானேன் என்பதை மீண்டும் மீண்டும்  உணர்த்தவே !

சோகம்

சோகங்கள் ஏதும் சொல்லிவிட்டு வருவதில்லை.
அவற்றை தகர்க்க நாம் முன்பே யோசித்துவைத்திருக்கிறோம் என்பதை அறிந்தும் கூட!

சேயிடம் தாய்.


நான் செல்லும் இடமெல்லாம் என்னை பின் தொடர்ந்து வந்து                             கொண்டேயிருந்தாய்,
" நீ தடம் மாறிச் செல்ல மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது "
                                                என்று கூறிக்கொண்டே !