Powered By Blogger

26.10.11

ஜனநாயகம்

ஆறு இலக்க எண்ணில் ஊழல் !
ஆனால்
தன் வாழ்க்கையையே திட்டமிடமுடியாமல்
  திண்டாடும் சாமானிய மனிதனின்
ஒரு நாள் வாழ்வதாரச் செலவு - இரண்டே இலக்க எண்ணில் !
  ஜனநாயகத்தின் கேலிக்கூத்து !

விதியின் விடைகள்


" விதியை மதியால் வெல்லலாம் "
   மதியையே விதியால் நிர்ணயிப்பவர்களுக்கு,
இது ஒர் வாய்மொழியே!
  நாம் நினைப்பதொன்று ஆனால் இங்கு நிகழ்வதோ எதிர்பாராத ஒன்று !
"ஏன்?", "எதற்கு?", "எப்படி?" பல அழகிய கேள்விகளுக்கு,
  ஒற்றை வார்த்தையில் விடை- "விதி" !

விடையில்லா கேள்வி !

எண்ணங்கள் என்னுடன் அலைமோதிக் கொண்டிருந்தன
    கேட்பதற்கு நீ அருகில் இல்லை.
எதையுமே எண்ணத் துணியாதபோது ,
  நீ வந்து கேட்டாய் , " முன்போல் நீ என்னுடன் பேசுவதில்லையே? " என்று !

கவிதை

அனுபவத்தால் பிறப்பது மட்டும் கவிதையல்ல.
   பிறர் அனுபவத்தை அனுபவித்து உணர்வதும் கவிதையே !

சந்திப்பு


எப்போதாவது உன்னிடம் பேசும்போதுதான் தெரிகிறது
   எப்போதுமே நான் உன்னுடன் பேச விழைகிறேன் என்று !

நம்பிக்கை


வாழ்க்கை முழுதும் வாழக் கற்றுக்கொண்டேன்...
 ' எப்படி வாழக் கூடாது ' என்று என்னிடம்
     யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் !

சேமிப்பு


வாழ்க்கை தன் கோர முகத்தை
  எப்போதாவது காட்டும் போதுதான் தெரிகிறது,
சந்தோஷத்தை சேமிப்பதன் அருமை !

21.10.11

Heaven in tambaram!


Beautiful morning...
Mind refreshes and I stepped into my comfort zone,
Once I placed my foot in this 365 acre campus!
Am sure allopathy and homeopathy can’t give this sort of a relief!
Listen to a beautiful melody…
Walk through any straight road, admiring the greenery…
You’re done! One of the most beautiful moments to be cherished!
A part of brown soil painted green
   With yellow flowers smiling over it!
Even the sun blushes and plays hide and seek
    Between the dense trees!
Yellow butterfly enjoys the fresh day
     Lingering over the lush green valley!
It’s an era of global warming.
Earth chills out the previous dusk and
     Warms up the next dawn!
The neatly laid black road is not so happy
      To have the wings of dragon fly!
‘He’ could have extended its life span
      At least to enjoy the nature’s beauty in ‘his own paradise’!
Where else you can learn these
       ‘Arts’ and ‘sciences’ ‘practically’ par with this?!
Architect and landscaping can be learnt
        Without shelling out single penny!
Mausam plays truant here
        Making colorful flowers bloom for each season.
Science block welcomes you all its way
        With violet bougainvilleas on green leaves!
A treat to watch!
Ageing is for human beings but not for nature.
        It had been two years since I started admiring and I still do.
Visiting this beautiful heaven before getting my dream home ready can make wonders!
Will this remain a place to be cherished forever?
        The tree cut down on the way doesn’t say so!
Heart simply longs for some more years here!
         Life’s most complicated fact-sacrifice one thing to enjoy the other!
I have to wait to see, with what I am blessed with next and where.
But, is there any substitution for this?
Negatives shouldn’t turn out as answers for positives!

மௌனம்


வார்தைகளை வைத்துக் கொண்டு ஏன் போறாடிக்கொண்டிருக்கிறாய் ?
உன் மௌனத்தால் என்னிடம் அத்துனை அழகாய் பேச முடியும் என்கிறபோது!!

சொந்தம்


          

ஆயிரம் சொந்தங்கள் இருந்தன ! ஆனால்
    எதையும் ரசிக்க முடியவில்லை.
எந்தச் சொந்தமும் இல்லாத இயற்கையை
    ' ரசிக்க ' மட்டுமே முடிந்தது !